தங்கத்தின் விலை வீழ்ச்சி

0
25
FILE PHOTO: Gold bars from the vault of a bank are seen in this illustration picture taken in Zurich, Switzerland, November 20, 2014. REUTERS/Arnd Wiegmann/File Photo

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (23) பவுண் ஒன்றுக்கு 3,000 ரூபாயால் குறைவடைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி, நேற்று (22) 368,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 24 கரட் தங்கம் பவுண் ஒன்று, இன்று 365,000 ரூபாயாகக் குறைந்துள்ளது.

அத்துடன், தற்போதைய விலை நிலவரப்படி, 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 335,800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 45,625 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 41,975 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here