கொழும்பில் இன்று (02) நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டம் தேசத் துரோகிகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
“பொதுமக்களை மீண்டும் கொழும்புக்கு வருமாறு சில குழுக்களால் அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தேசத் துரோகிகள். அவர்களை துரோகிகள் என்றே சொல்ல வேண்டும். ஏனெனில், சுற்றுலா பயணிகள் வர முயற்சி செய்கின்றனர். கடந்த 28ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டம் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று எமது ஜனாதிபதியின் ஆலோசகர் சாகல ரத்நாயக்க மற்றும் கலாநிதி சமரதுங்க தலைமையில் நடைபெற்றது. நல்ல பலன்களைப் பெற்றுக் கொண்டிருக்கும் தருணம். மூன்றாம் நாள் மீண்டும் அது பற்றிய சிறப்பு விவாதம் நடைபெறும்.
இதற்காக சீனா, இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகளின் உடன்படிக்கையுடன் செயற்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அப்போது இதுபோன்ற சூழலை உருவாக்கி இப்பிரச்னைக்கு முடிவு கட்ட, வழி அமைக்கும் போது, குறைந்தபட்சம் ஓராண்டு கால அவகாசத்தை பொதுமக்கள் வழங்க வேண்டும்.”
நேற்று (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே வஜிர அபேவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.