அடுத்த மாதம் முதல் எரிபொருள் மேலாண்மை QR முறையை நீக்குவதற்கு எந்த முடிவும் இல்லை என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர நேற்று (21) தமது டுவிட்டரில் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விநியோகத்திற்கான ‘QR கோட்’ அமைப்பை அரசாங்கம் நீக்கவுள்ளதாக சமூக வளையதளங்களில் செய்திகள் வெளியாகியிருந்த நிலையிலேயே அமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, எரிபொருள் விநியோகம் முழுமைப்படுத்தப்படும் பூர்த்தியாகும் வரை எரிபொருள் முகாமைத்துவ QR அமைப்பு தொடரும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
யூகங்களை பரப்ப வேண்டாம் என அவர் மேலும் கூறியுள்ளார்.
N.S