இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வைக் காண ஜனாதிபதி அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு!

0
95

அதிகாரப் பரவலாக்கம் தொடர்பில் வரவு செலவுத்திட்ட வாக்கெடுப்புகள் நிறைவடைந்த பின்னர், அனைத்து கட்சி கூட்டத்திற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.

இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வைக் காண அனைத்து தரப்பினரையும் கலந்துரையாடுமாறும் அழைப்பு விடுத்துள்ளார்.

இன்று ஆரம்பமான 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதத்தின் போது சபையில் உரையாற்றிய ஜனாதிபதி, இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண ஒன்றிணைந்து செயற்பட விரும்புகிறீர்களா என நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வினவினார்.

இதற்குப் பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், வரவு செலவுத் திட்ட அமர்வுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் கூட்டத்தை கூட்டுமாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதன்படி, 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்புக்கு அடுத்த வாரம் டிசம்பர் 08 ஆம் திகதி அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் கூடுமாறு ஜனாதிபதி விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

டிசம்பர் 08 ஆம் திகதி மாலை 5.00 மணிக்கு வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.

N.S

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here