அடுத்த ஆண்டு பொருளாதாரம் ஸ்திரமடைபியும் – நந்தலால்

0
166

2023ஆம் ஆண்டில் நாட்டின் பொருளாதாரம் மீளும் என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடியை சமாளிப்பது குறித்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு தெளிவுபடுத்தும் நிகழ்வொன்று கொழும்பில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

2019ஆம் ஆண்டின் ஸ்திரத்தன்மைக்கு நிகரான நிலைக்கு 2023 இல் பொருளாதாரம் கட்டியெழுப்பப்படும் என்றும் மத்திய வங்கியின் ஆளுநர் நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும், அடுத்த ஆண்டு நாட்டை மீட்டெடுக்கும் ஆண்டாக இருக்கும் என்றும், குறைந்த பணவீக்கம், அதிக வளப் பயன்பாடு மற்றும் ஸ்திரத்தன்மையுடன் பொருளாதாரம் கட்டியெழுப்பப்படும் என்றும் ஆளுநர் கூறினார்.

வளங்களை கட்டியெழுப்புவது இலங்கைக்கு கடினமான பணியாக இருந்துள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் மேலும் தெரிவித்தார்.

N.S

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here