சுற்றுலா விசாவில் மலேசியா செல்ல முயன்ற 23 பேர் தடுத்து நிறுத்தப்பட்டனர்

0
336

கடந்த சில தினங்களில் மலேசியாவிற்கு பணிக்காக செல்ல முயற்சித்த மூன்று முயற்சிகள் தடுக்கப்பட்டதாகவும், 23 பேர் வீட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டதாகவும், மலேசியா செல்வோர் குறித்த விமான நிலையத்தில் விசாரணைகள் கடுமையாக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

கடந்த 2ம் திகதி மலேசியாவிற்கு பணிக்கு வந்த 4 பெண்கள், 5 ஆண்கள் உட்பட 9 பேரின் பயணம் நிறுத்தப்பட்டதுடன், கடந்த 3ம் திகதி சுற்றுலா விசாவில் மலேசியாவிற்கு பணிக்காக செல்ல முயன்ற 5 பெண்களும், 4 பயணம் தடுத்து நிதுத்தப்பட்டுள்ளது.

மேலும் சுற்றுலா விசாவில் மலேசிய வேலைக்காக செல்ல முயன்ற இரண்டு பெண்களும் தடுத்து நிறுத்தப்பட்டதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

N.S

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here