மின்சாரக் கட்டண உயர்வு, நாட்டை விட்டு வெளியேறும் நிறுவனங்கள்

0
250

மீண்டும் மின்சாரக் கட்டணத்தை உயர்த்தும் பட்சத்தில் இலங்கையில் ஆடைத் தொழில் முற்றாக வீழ்ச்சியடையும் என சுதந்திர வர்த்தக வலய தொழிற்சங்கம் ஒன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

“அதிக உற்பத்திச் செலவுகள் காரணமாக, ஆடைத் துறையில் உள்ள பெரிய நிறுவனங்களின் தொழிற்சாலைகளை இலங்கையிலிருந்து வேறு நாடுகளுக்கு மாற்றுவதற்கு ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, டிசம்பர் மாத இறுதிக்குள் பல நிறுவனங்கள் நாட்டை விட்டு வெளியேறப்போகின்றன.” என சுதந்திர வர்த்தக வலய தொழிலாளர் மையத்தின் அழைப்பாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான காமினி ரத்நாயக்க.

இந்தநிலையில் ஆடைத்தொழிற்சாலைகளின் வேலைவாய்ப்பை இழக்கும் அபாயம் பாரியளவில் காணப்படுவதாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை மின்சார சபைக்கு ஏற்படும் நட்டத்தை குறைக்கும் வகையில் எதிர்வரும் ஜனவரி மற்றும் ஜூன் மாதங்களில் மீண்டும் மின்சார கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் தயாராகி வருகிறது.

இதற்கு அமைச்சரவை அனுமதி ஏற்கனவே கிடைத்துள்ளது.

N.S

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here