மேல்மாகாணத்தில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரைகள் விற்பனை செய்வது தொடர்பில் பாடசாலைகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 75 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேல் மாகாணத்தில் உள்ள 122 பாடசாலைகளை இலக்கு வைத்து நேற்று (16) நண்பகல் 12.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் இந்த கைது இடம்பெற்றுள்ளது.
அங்கு 2 கிலோ 148 கிராம் அபின், 9 கிராம் 375 மில்லி கிராம் ஹெரோயின், 01 கிராம் 522 மில்லிகிராம் ஐஸ் மற்றும் 10 மாத்திரைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேல்மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோனின் ஆலோசனையின் பேரில் இந்த நடவடிக்கை தொடர்கிறது.