உள்ளூராட்சி தேர்தல், மாகாண சபை அல்லது பாராளுமன்றத் தேர்தல்களுக்கு முன்னதாக ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதற்குக் காரணம் நாட்டின் தற்போதைய நிலவரத்தின் அடிப்படையில் ஜனாதிபதித் தேர்தல் ஓரளவுக்கு சாதகமாக அமையலாம் என்ற மதிப்பீடுதான்.
எந்தவொரு தேர்தலுக்கும் முன்னர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஐக்கிய தேசியக் கட்சியுடன் புதிய கூட்டணியை அமைத்து ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்தில் களமிறங்குமென அரசியல் ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
பொருளாதார மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் ஒத்திவைக்கப்படும் என ஏற்கனவே செய்திகள் வெளியாகியுள்ளன.
பொதுஜன பெரமுன ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டணியின் பொது வேட்பாளராக தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க களமிறக்கப்படும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாகவும் அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
N.S