லுணுகலை பிரதேச சபையில் மீண்டும் மலர்ந்தது பொதுஜன பெரமுனவின் ஆட்சி!

Date:

லுணுகலை பிரதேச சபையின் புதிய தவிசாளரை தேர்ந்தெடுக்கும் முகமான வாக்கெடுப்பில் சிறிலங்கா பொது ஜன பெரமுனவை சேர்ந்த ஒருவரும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த ஒருவருமாக இருவர் போட்டியிட்டனர். 

இதில் சிறிலங்கா பொது ஜன பெரமுனவை சேர்ந்த L..P.N.U.A.அநுரவிக்ரமதுங்க மேலதிக மூன்று வாக்குகளால் தவிசாளராக இன்றைய தினம் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

இவருக்கு ஆதரவாக ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த 7 உறுப்பினர்களும் சிறிலங்கா பொது ஜன பெரமுனவை சேர்ந்த 3 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.

 இவருக்கு கிடைக்கப்பெற்ற மொத்த வாக்குகள் 10ஆகும்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் பிரதிநிதித்துவப் படுத்திய R.W.P.L.U. எட்வின்க்கு கிடைக்கப்பெற்ற மொத்த வாக்குகள் 7ஆகும். 

சிறி லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் மூவரும் சிறிலங்கா பொது ஜன பெரமுன உறுப்பினர்கள் இருவரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினர்கள் இருவருமாக மொத்தமாக 7 வாக்குகளை இவருக்கு அளித்தனர்.

ஜேவிபி உறுப்பினர் ஒருவரும் மலையக மக்கள் முன்னணியின் உறுப்பினர் ஒருவரும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவை சேர்ந்த நடுநிலை வகித்தமை குறிப்பிடத்தக்கது.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

10 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக 10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய...

மழை தொடரும்

நாட்டின் கிழக்குப் பகுதியில் தற்போது நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை,...

20 ஆயிரம் ரூபாவால் குறைந்த தங்கம் விலை!

இலங்கையில் தங்கத்தின் விலை நேற்றுடன் (17) ஒப்பிடுகையில் 20,000 ரூபாவினால் குறைந்துள்ளதாக...

6வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் DP Education

இலங்கையின் முன்னணி ஆன்லைன் கல்வி தளமான DP Education, இன்று (அக்டோபர்...