மஹிந்தவின் கோட்டையில் கவிழ்ந்தது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன!

Date:

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் தேர்தல் கோட்டையாக கருதப்படும் குருநாகல் மாநகர சபையின் 2023ஆம் ஆண்டிற்கான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வரவு செலவுத் திட்டம் 7 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

குருநாகல் மாநகர சபையின் மேயர் துஷார சஞ்சீவ விதாரன நேற்று சமர்ப்பித்த வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 7 வாக்குகளும் மாத்திரமே கிடைக்கபெரென. ஆனால் எதிராக 14 வாக்குகள் அளிக்கப்பட்டன.

குருநாகல் மாநகர சபையின் அதிகாரம் பொதுஜன பெரமுனவின் வசமிருந்த மாற்றுக்கட்சிகள் கைப்பற்றுமென அரசியல் அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலொன்று அடுத்தவருட ஆரம்பத்தில் நடைபெற்றால் பொதுஜன பெரமுன பாரிய பின்னடைவை சந்திக்க நேரிடலாம் என்றும் அரசியல் அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

யோஷித ராஜபக்ஷ கைது!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது...

இன்னும் தேடப்படும் நிலையில் உள்ள 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்

வெளிநாட்டு கடனை செலுத்தும் நடவடிக்கையின் போது, அரசுக் கருவூலத்திற்குச் சொந்தமான அமெரிக்க...

என்னை கைது செய்ய வேண்டாம்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில், பயங்கரவாதத் தடுப்புச்...

கொலை வழக்குகளில் சிக்கும் பிள்ளையான்!

கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் T-56 ரக துப்பாக்கிகளால் சுட்டு ஐந்து...