நாட்டில் மிகவும் வறிய மக்கள் மேலும் வறியவர்களாகி வருகின்றனர் – மத்திய வங்கியின் ஆளுநர்!

0
170

சீர்குலைந்துள்ள பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கு வேதனையான தீர்மானங்களை எடுக்க வேண்டியுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

பொருளாதார மந்தநிலையின் போது பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த இதுபோன்ற முடிவுகளை எடுக்கும்போது, ​​பொதுமக்கள் மிகுந்த வேதனையை அனுபவிப்பார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

பொருளாதார நெருக்கடியின் போது பணவீக்கம் அதிகரித்ததன் காரணமாக மக்களின் வாழ்க்கைச் செலவு பிரச்சினையாக மாறியுள்ளதாகவும், குறைந்த வருமானம் பெறும் மக்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டில் மிகவும் வறிய மக்கள் மேலும் வறியவர்களாகி வருவதாகவும், வறுமைக் கோட்டின் கீழ் உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் தெரிவித்த மத்திய வங்கியின் ஆளுநர், ஏழைகளை பாதுகாப்பதே அரசாங்கத்தின் முதல் பொறுப்பு எனவும், அவ்வாறு செய்யாவிட்டால் , அரசியல் ஸ்திரத்தன்மையைப் பேணுவது கடினமாக இருக்கும்.

மேலும், நாட்டில் அந்நியச் செலாவணி நெருக்கடி நிலவும் வேளையில், வெளிநாடுகளில் இருந்து அனைத்தையும் இறக்குமதி செய்து ஆடம்பரமாக வாழ்வது கடினம் என்றும், பொருளாதாரம் சீராகும் வரை, வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்வதன் மூலம் நெருக்கடியிலிருந்து விடுபடலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

N.S

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here