சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 31 தமிழ் அரசியல் கைதிகளை உடன் விடுவிக்க வேண்டும்!

Date:

சிறைச்சாலைகளில் தடுப்புக்காவலில் உள்ள 31 தமிழ் அரசியல் கைதிகளும் விரைவில் விடுதலை செய்யப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

அரசியல் தீர்வு காண்பதற்கு முன்னர் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் என்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கருத்துடன் நான் உடன்படுகின்றேன். காணி விவகாரமும், அரசியல் கைதிகள் விடயமும் அவற்றில் முக்கியம் பெறுகின்றன.

சிறைகளில் தற்போது தமிழ் அரசியல் கைதிகள் 31 பேர் உள்ளனர் என்று நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார். அவற்றில் குற்றம் நிரூபிக்கப்பட்ட 15 பேரையும் பாதிக்கப்பட்ட தரப்புக்களுடன் பேசி பொதுமன்னிப்பில் ஜனாதிபதியால் விரைவாக விடுவிக்க முடியும்.

குற்றஞ்சாட்ட ஏனைய 16 பேர் மீதான வழக்கு விசாரணையைத் துரிதப்படுத்தி அவர்களையும் ஏதோவொரு வழியில் விரைந்து விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ் அரசியல் கைதிகளை விடுதலைசெய்ய நாம் எந்த எதிர்ப்புக்களையும் வெளிப்படுத்த மாட்டோம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸதெரிவித்துள்ளார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கபில சந்திரசேனவின் சடலம் மீது உடல் கூற்று பரிசோதனை

கபில சந்திரசேனவின் மரணத்திற்கான சரியான காரணத்தை கண்டறிவதற்காக அவரது உடல் உறுப்புகள்...

தன் மீதான தாக்குதல் செய்தி குறித்து டில்வின் சில்வா!

JVP தலைமையகமான பெலவத்தையில் வைத்து தன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக எதிர்க்கட்சியினரும்...

யாழ். போதனா வைத்தியசாலையில் தீ விபத்து!

​யாழ். மண்ணின் உயிர்நாடியாக விளங்கும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று அதிகாலை...

கப்பில சந்திரசேன தற்கொல?

கப்பில சந்திரசேன “தற்கொலை செய்து கொண்டார்” என்ற தகவல்கள் சமூக ஊடகங்கள்...