துணிவுடன் சேவல் சின்னத்தில் தனித்து களமிறங்க காங்கிரஸ் முடிவு

0
239

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் சேவல் சின்னத்தில் சுயேச்சையாக போட்டியிட இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.

இ.தொ.கா.வின் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தலைமையில், சிரேஷ்ட தலைவர்கள் மற்றும் உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் கலந்துகொண்ட கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் கணபதி கனகராஜா ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இ.தொ.கா. தொடர்ச்சியாக ஒவ்வொரு தேர்தல்களிலும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சியாகவே போட்டியிட்டதாகவும், உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கட்சி சின்னத்தில் போட்டியிடுவதன் மூலம் அரசியல் அரங்கில் அதன் நிலையை தீர்மானிக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இ.தொ.கா சுயேட்சையாக கட்சி சின்னத்தில் போட்டியிடும் போது ஏனைய அரசியல் கட்சிகள் பெற்ற வாக்குகளின் வீதம் ஓரளவு குறையும் என அவர் மேலும் தெரிவித்தார்.

மக்கள் எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடியை கருத்திற் கொண்டு கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சியாக போட்டியிடுவது இ.தொ.கா.வுக்கு பாதகமானது என அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here