காமன்வெல்த் பாராளுமன்ற சங்கத்தின் தலைவர் ஜனாதிபதியை சந்தித்தார்!

Date:

உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பொதுநலவாய நாடுகளின் நாடாளுமன்ற சங்கத்தின் செயலாளர் நாயகம் ஸ்டீபன் ட்விக் இன்று (ஜன. 13) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளார்.

இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இந்த நிகழ்வில் ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் மற்றும் ஜனாதிபதியின் பணிமனைகளின் பிரதானி சாகல ரத்நாயக்கவும் கலந்துகொண்டனர்.

இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ட்விக், பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோரை நேற்று சந்தித்தார்.

தனது விஜயத்தின் போது, பாராளுமன்ற சபாநாயகர், சபைத் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் அவர் சந்திப்புகளை நடத்தவுள்ளார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சுரேஷ் சாலேவுக்கு திடீர் மாரடைப்பு

முன்னாள் அரச புலனாய்வு சேவைத் தலைவர் சுரேஷ் சாலே திடீர் மாரடைப்பு...

அரசு ஊழியர்களுக்கு தவணை கட்டண முறையில் 20 கிலோ அரிசி!!

அரசு ஊழியர்களுக்கு தவணை கட்டண முறையின் கீழ் 20 கிலோ அரிசி...

ஜனாதிபதி செயலக சிரேஷ்ட உதவிச் செயலாளர் கைது…!

-போலி கடவுச்சீட்டு தயாரித்த குற்றச்சாட்டு: ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் தொடர்புடைய நபர் ஒருவர்...

சரித் அபேசிங்க மீது SJB எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை

இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐக்கிய...