தைத்திருநாளை கொண்டாட மலையக மக்கள் தயார்!

0
230

உழவர் திருநாளான தைப்பொங்கலை உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் கொண்டாட ஆயத்தமாகி வருகின்றனர்.

உழவர்கள் தமக்கு உணவளித்த இயற்கைக்கும் கால்நடைகளுக்கும் நன்றி கூறுவது தொன்றுதொட்டு வந்த மரபாகும்.

இந்த மரபினை போற்றும் வகையில் சமயத்திற்கும் இயற்கைக்கும் முக்கியத்துவமளித்து நாளை மலர உள்ள தைப்பொங்கல் திருநாளை கொண்டாடுவதற்கு உலக வாழ் மக்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.

மலையகப்பகுதிகளில் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தைப்பொங்கலை கொண்டாடுவதற்கு மலையக மக்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.

மலையக பகுதியில் வாழும் தமிழ் மக்கள் இம் முறை தைப்பொங்கலினை சமய சம்பிரதாயங்களுக்கு முக்கியத்துவமளித்து கொண்டாடுவதற்கு ஆயத்தமாகி வருகின்றனர்.

இந்த தைத்திருநாளினை ஒட்டி பூஜை பொருட்களையும்,அத்தியாவசிய பொருட்களையும் பொங்கல் செய்வதற்கான புதுப்பானை,பாலை,போன்றவற்றினை கொள்வனவு செய்வதனை காணக்கூடியதாக இருந்தது.

ஹட்டன் தலவாக்கலை,நோர்வூட்,பொகவந்தலா,மஸ்கெலியா உள்ளிட்ட நகரங்களில் பொங்கலை முன்னிட்டு நடை பாதை வர்த்தகம் மற்றும் புடைவை கடைகள் ஆகியவற்றில் ஓரளவு சனநடமாற்றம் காணப்பட்டன.

N.S

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here