அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை எதிர்வரும் சில வருடங்களுக்குள் முழுமையாக அமுல்படுத்த அரசாங்கம் பரிசீலித்து வருவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று (ஜன. 15) நடைபெற்ற தேசிய தைப்பொங்கல் அரச விழாவில் கலந்து கொண்ட அவர், 13ஆவது திருத்தச் சட்டத்தை அடுத்த சில வருடங்களுக்குள் முழுமையாக அமுல்படுத்த நாங்கள் எதிர்பார்த்துள்ளோம்.
இதேவேளை, தைப்பொங்கல் அரச விழாவில் பங்கேற்பதற்காக யாழ்ப்பாணம் சென்றிருந்த ஜனாதிபதி, இன்று (ஜன. 15) காலை யாழ்ப்பாணம் ஸ்ரீ நாக விகாரைக்குச் சென்று சமய நிகழ்வுகளில் ஈடுபட்டு ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நல்லை ஆதீன ஆஸ்ரமதிபதி வணக்கத்திற்குரிய ஸ்ரீ சோமசுந்தரத்தையும் சந்தித்து ஆசிகளைப் பெற்றிருந்தார். யாழ்.ஆயர் அதி வணக்கத்திற்குரிய கலாநிதி ஜஸ்டின் ஞானப்பிரகாசம் அவர்களையும் சென்றடைந்த ஜனாதிபதி சிறு கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
N.S