டுபாய் இளவரசருடன் முதலீட்டு சபை உறுப்பினர்கள் சந்திப்பு

0
173

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வந்த ஐக்கிய அரபு இராச்சியத்தின் அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் ஷேக் மொஹமட் பின் மக்தூம் பின் ஜுமா அல் மக்தூம் உள்ளிட்ட குழுவினர் கடந்த 13ஆம் திகதி இலங்கை முதலீட்டுச் சபை. பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடினர்.

இந்நிகழ்வில் இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவர் தினேஷ் வீரக்கொடி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

அங்கு இளவரசர் பின் மக்தூம் பின் ஜுமா அல் மக்தூம் உள்ளிட்ட தூதுக்குழுவினர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இலங்கை வர்த்தகங்களை மேம்படுத்துவதற்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளனர்.

மேலும், ஐக்கிய அரபு அமீரகத்தின் எரிசக்தி, சுரங்கம் மற்றும் விவசாய நிதியைப் பயன்படுத்தி இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ளவும் அவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here