தேர்தலுக்கு பணம் கொடுப்பது மத்திய வங்கியின் வேலையல்ல!

Date:

வரிகளை உயர்த்துவதற்கும் தேர்தலுக்கு பணம் வழங்குவதற்கும் நிதியமைச்சும் திறைசேரியுமே முழுப்பொறுப்புடையது என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கி இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவதில்லை என தெரிவித்த அவர், நாட்டின் நிதிக் கொள்கையையே மத்திய வங்கி அமுல்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

வரியை உயர்த்துவதும், தேர்தலுக்கு பணம் வழங்குவதும் நாடாளுமன்றம், அமைச்சரவை மற்றும் நிதி அமைச்சகத்தின் வேலை என்றும், நிதிக் கொள்கை உள்ளிட்ட வரிக் கொள்கையை அவர்கள்தான் செயல்படுத்துகிறார்கள் என்றும் அவர் கூறினார்.

மத்திய வங்கியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

விமல் வீரவன்ச மனைவி மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

போலி ஆவணங்களை சமர்ப்பித்து சட்டவிரோதமாக இராஜதந்திர வெளிநாட்டு கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டதாக முன்னாள்...

மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும்

இலங்கைக்கு வடகிழக்கே நிலைகொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம், நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில்...

அழுத்தம் கொடுத்து வலுக்கட்டாய வாக்குமூலம்

விசாரணை நடவடிக்கைகளுக்கு தேவையான ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருப்பதாகவும், ஆனால் அழுத்தம்...

மின் கட்டண உயர்வு இன்று தொடக்கம் அமுலில்

2026 ஆம் ஆண்டின் இரண்டாம் மற்றும் மூன்றாம் காலாண்டுகளுக்குரிய மின்சாரக் கட்டணத்...