இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாட்டை தடுக்கும் வகையில் எரிபொருள் கொள்வனவு செய்யவென இந்தியா நிதி உதவி வழங்க முன்வந்துள்ளது.
அதன்படி இலங்கைக்கு LOC திட்டத்தின் கீழ் 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்க இந்தியா தீர்மானித்துள்ளது.
நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் இந்திய வௌிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோருக்கு இடையில் சூம் வழியே இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இந்த நிதி உதவி இலங்கைக்கு கிடைக்கப்பெறுகிறது.
இதற்கு முன்னரும் 900 மில்லியன் அமெரிக்க டொலர் இந்தியாவால் இலங்கைக்கு கடன் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.