Tuesday, January 14, 2025

Latest Posts

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது அமர்வு நாளை ஆரம்பம்!

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது அமர்வு நாளை (பிப்ரவரி 08) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

சம்பிரதாய திறப்பு விழாவுக்கான ஒத்திகை திங்கட்கிழமை (பிப்ரவரி 06) பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இதில் கோட்டே ஜனாதிபதி பெண்கள் கல்லூரி மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நாளை சம்பிரதாயபூர்வமாக அமர்வு ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அரசியலமைப்பின் 33 ஆவது சரத்தின் கீழ் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக ஜனாதிபதி அரசாங்க கொள்கை அறிக்கையை முற்பகல் 10.00 மணிக்கு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளார்.

ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில், நான்காவது அமர்வின் சம்பிரதாய ஆரம்ப விழாவை சம்பிரதாயமான வைபவமாக நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் துப்பாக்கி வணக்கங்கள் மற்றும் வாகன அணிவகுப்புக்கள் நடத்தப்பட மாட்டாது என ஆயுதப் படை அதிகாரி நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அழைக்கப்பட்ட விருந்தினர்கள் நாளை காலை 09.15 மணிக்குள் இருக்கையில் அமருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன மற்றும் அவரது மனைவியின் வருகையை தொடர்ந்து பிரதமர் தினேஷ் குணவர்தன வரவுள்ளார், அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி விக்கிரமசிங்க மற்றும் முதல் பெண்மணி வருகை தருவர்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க ஆகியோர் பாராளுமன்ற கட்டிடத்தின் பிரதான படிக்கட்டுகளுக்கு அருகில் ஜனாதிபதியை வரவேற்கவுள்ளனர்.

இந்த வரவேற்பைத் தொடர்ந்து, சபாநாயகர் மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தலைமையில் சார்ஜென்ட், ஆயுதப்படை துணை சார்ஜென்ட் மற்றும் ஆயுதப்படை உதவி சார்ஜென்ட் ஆகியோர் ஜனாதிபதியை பாராளுமன்ற கட்டிடத்திற்கு அழைத்துச் செல்வார்கள்.

இதன்போது, கோட்டே ஜனாதிபதி பெண்கள் கல்லூரி மாணவிகள் ஜெயமங்கல காதை பாடி ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத்தை அலங்கரிப்பர்.

ஜனாதிபதி அரசாங்க கொள்கை அறிக்கையை சமர்ப்பித்த பின்னர், சபை புதன்கிழமை (பிப்ரவரி 09) காலை 9.30 மணி வரை ஒத்திவைக்கப்படும். ஒத்திவைக்கபடுவதைத் தொடர்ந்து, இராஜதந்திரிகள் உட்பட அழைக்கப்பட்ட விருந்தினர்களுக்கு தேநீர் விருந்தில் கலந்துகொல்வர்.

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது அமர்வை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பிப்பதற்கு வெளிநாட்டு இராஜதந்திரிகள், முன்னாள் ஜனாதிபதிகள், பிரதம நீதியரசர், உச்ச நீதிமன்ற நீதிபதிகள், சட்டமா அதிபர், பாதுகாப்பு செயலாளர், முப்படைகளின் தளபதிகள் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளனர்.

N.S

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.