பிரான்ஸ் தூதுவர் – கூட்டமைப்பு  சந்திப்பு!

Date:

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

நேற்று நடைபெற்ற இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், இரா.சாணக்கியன் மற்றும் கலையரசன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது தமிழ் மக்களின் அரசியல் தீர்வு, சுதந்திர தினத்தையொட்டிக் கரிநாளாக அறிவித்த தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டிருந்த போராட்டம் என்பன தொடர்பில் பேசப்பட்டன.

அத்துடன், எதிர்வரும் காலங்களில் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கும் உதவிகளை எவ்வாறு தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கு உதவும் வகையில் வழங்க முடியும் என்பது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்ற மேற்படி சந்திப்பில், இலங்கைக்கான பிரான்ஸின் துணைத் தூதுவரும் பங்கேற்றிருந்தார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பணிப்புறக்கணிப்பு

நாடு முழுவதிலும் இன்று (9) காலை 8 மணி முதல் 48...

NDB விவகாரம்: இலங்கை மத்திய வங்கி அமைப்பில் மாற்றம் அவசியம்

-அடால்ஃப் தேசிய அபிவிருத்தி வங்கி PLC (NDB) இல் இடம்பெற்றதாகக் கூறப்படும்...

இன்றைய வானிலை

மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா மற்றும்...

நிலக்கரி கொள்முதல் தொடர்பில் விசேட கணக்காய்வு அறிக்கை வெளியீடு

நுரைச்சோலை லக்‌விஜய மின்நிலையத்திற்கான நிலக்கரி கொள்முதல் செயல்முறை மற்றும் 2025/2026 பருவத்திற்கான...