2026ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் மின்சாரக் கட்டணத்தை 2.88% அதிகரிக்க தேசிய மின் கட்டமைப்பு இயக்குநர் நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.
எனினும், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு 1.46% கட்டண அதிகரிப்பை மாத்திரமே பரிந்துரைத்துள்ளது.
இது தொடர்பான இறுதி முடிவு நாளை நடைபெறவுள்ள பொதுமக்கள் கருத்தறியும் கூட்டத்தின் பின்னர் அறிவிக்கப்படும்.
பொதுமக்கள் கருத்தறியும் கூட்டத்தில் பங்கேற்க விரும்புவோர் 0770399119 என்ற தொலைபேசி இலக்கத்தைத் தொடர்புகொண்டு பதிவு செய்யுமாறு PUCSL அறிவித்துள்ளது.
