ஜனாதிபதி ரணில் விக்கிரசிங்க நாளைமறுதினம் சனிக்கிழமை யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளார்.
இந்நிலையில், அதற்கான ஒழுங்கமைப்புகள் தொடர்பான முன்னேற்பாட்டுக் கூட்டம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்றது.
யாழ். மாவட்ட அரச அதிபர், வடக்கு மாகாண பிரதம செயலாளர், ஜனாதிபதியின் வடக்கு அபிவிருத்திக்குப் பொறுப்பான மேலதிக செயலாளர், பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி, யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர், முப்படைகளின் பிரதிநிதிகள், பிரதேச செயலர்கள், சம்பந்தப்பட்ட திணைக்களங்களின் தலைவர்கள் ஆகியோர் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
N.S