மாவனல்லை பிரதேச சபையின் தலைவர் பதவியில் இருந்து தற்காலிகமாக நீக்கம்

0
242

மாவனல்லை பிரதேச சபையின் தலைவர் நோயல் ஸ்டீவன் தற்காலிகமாக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவவினால் நேற்று செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 14) வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் மாவனல்லை பிரதேச சபையின் உப தலைவர் கோரலே கெதர பியதிஸ்ஸ பதில் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஒரு தொழிலதிபரிடம் இருந்து 2 மில்லியன் இலஞ்சம் கேட்ட குற்றச்சாட்டில் மாவனல்லை பிரதேச சபையின் கைது செய்யப்பட்டார்.

கட்டிடத் திட்டமொன்றுக்கு அனுமதி வழங்குவதற்காக பணத்தை பெற்றுக்கொண்ட போதே இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அவரை கைதுசெய்துள்ளது.

அதே வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக, மாவனல்லை பிரதேச சபையின் தலைவரினால் மேற்கொள்ளப்பட்ட தவறுகள் தொடர்பில் ஆராயுமாறு ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ரோஹன அனுரகுமாரவிடம் ஆளுநர் கொப்பேகடுவ பணித்துள்ளார்.

இதன்படி, ஓய்வுபெற்ற நீதிபதி, மூன்று மாதங்களுக்குள் இது குறித்து விசாரணை நடத்தி, ஆளுநரிடம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

N.S

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here