சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் மோதல்!

0
282

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர்களிடையே மோதலொன்று ஏற்பட்டுள்ளதாக சமனலவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று இரவு இந்த மோதல் ஏற்பட்டுள்ளது.

முகாமைத்துவ பீடத்தில் முதலாம் ஆண்டில் கல்வி கற்கும் விடுதியில் தங்கியிருக்கும் மாணவர்கள் குழுவிற்கும் மற்றுமொரு மாணவர்கள் குழுவிற்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் இவ்வாறு மோதலாக மாறியுள்ளது.

தாக்குதலில் 9 மாணவர்கள் காயமடைந்து பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தாக்குதல் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை சமனலவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

N.S

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here