முக்கிய செய்திகளின் சுருக்கம் 16.02.2023

Date:

  1. ஒரு யூனிட் மின்சாரத்திற்கு அதிக விலை கொடுத்து வாங்கும் நுகர்வோரின் சிரமத்தை குறைக்கும் வகையில் 36 சதவீத மின்சார கட்டண உயர்வுக்கான PUCSL தலைவர் ஜானக ரத்நாயக்கவின் முன்மொழிவை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் மூன்று உறுப்பினர்கள் நிராகரிக்கின்றனர் : இலங்கை மின்சார சபையின் 66 சதவீத உயர்வை தொடர அனுமதியளித்துள்ளனர்.
  2. குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் எவரையும் விட்டு வைக்காமல் நிவாரணம் வழங்குமாறு அரச அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை – 2.85 மில்லியன் (28,50,000) குடும்பங்களுக்கு உணவளிக்க போதுமான அரிசியை கொள்வனவு செய்யுமாறு பணிப்புரை விடுத்துள்ளார். இதற்கு 20 பில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன் ஒவ்வொரு குடும்பத்திற்கும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 10 கிலோ அரிசி வழங்கப்படும்.
  3. முதலீட்டாளர்களுக்கு முதலீடு தொடர்பான தகவல்களை இலகுவாக அணுகுவதற்கும் புதிய வர்த்தகநாம அனுபவத்தை வழங்குவதற்கும் அதன் இயல்புகளில் முதன்மையான ஒரு MobileApp ஐ அறிமுகப்படுத்துவதன் மூலம் இலங்கை முதலீட்டுச் சபை நிலையான அபிவிருத்தி இலக்குகளை எதிர்பார்க்கிறது.
  4. கல்மந்த, அளுத்கம – மத்துகம பிரதேசத்தில் 34 வயதுடைய ஒருவரை கொடூரமாக தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் 16 வயதுடைய மூன்று சிறுவர்கள் வெலிபென்ன பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர் – பாதிக்கப்பட்ட 34 வயதுடைய நபர் குருதிப்பிட்டி, வலகெதர பிரதேசத்தில் வசிபவர் என்பதுடன் இவர் சிகிக்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
  5. இலங்கையில் சாரதி அனுமதிப்பத்திரம் வைத்திருக்கும் 12,700,000 நபர்களில் ஒரு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் (1,122,418) பெண்கள் என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது. அவர்களில் கனரக வாகன உரிமம் பெற்ற 2,082 பெண்கள் உள்ளனர். ஓட்டுநர் உரிமத்திற்காக விண்ணப்பித்த பெண்களில் கணிசமான அதிகரிப்பு இருப்பதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் வலியுறுத்துகிறது.
  6. நெல் கொள்வனவு மற்றும் விநியோகத்திற்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டம் தொடர்பான சுற்றறிக்கையை திறைசேரி வெளியிட்டுள்ளது – நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சராக ஜனாதிபதி விக்கிரமசிங்கவின் வழிகாட்டுதலின் பேரில் திறைசேரி செயலாளர் சிறிவர்தனவின் கையொப்பத்தின் கீழ் சுற்றறிக்கை வெளியிடப்பட்ட்டுள்ளது.
  7. கண்டி மாநகரில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க தலதா மாளிகையில் 34 வருட இடைவெளிக்குப் பின்னர் எதிர்வரும் பெப்ரவரி 19ஆம் திகதி “ஜனராஜ பெரஹரா” நடைபெறவுள்ளது: 75ஆவது சுதந்திரக் கொண்டாட்டத்தை முன்னிட்டு இந்த ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் இந்த நிகழ்வு ஆரம்பமாகும்.
  8. போராட்டக்காரர்களின் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் அடிபணியாது என குறிப்பிட்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சில அதிகாரிகள் பணிநீக்கம் செய்யக் கோரி சில குழுக்கள் வேலைநிறுத்தம் செய்வதால், அரசாங்கம் யாரையும் தன்னிச்சையாக நீக்காது, ஏனெனில் ஒரு நடைமுறை பின்பற்றப்படுகிறது ; அரசாங்கம் விதிகளைப் பின்பற்றி அதற்கேற்ப செயல்படும் என்று வலியுறுத்துகிறார் : ருஹுணு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை பதவி நீக்கம் செய்யவும், அரச கூட்டுத்தாபனமொன்றின் பொது முகாமையாளரை நீக்கவும் கோரி அண்மையில் இடம்பெற்ற இரண்டு ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து அவரது கருத்துக்கள் இவ்வாறு வெளியாகியுள்ளன.
  9. 2005 ஆம் ஆண்டு திஸ்ஸமஹாராமவில் இடம்பெற்ற சுற்றிவளைப்பின் போது நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் திஸ்ஸமஹாராம பொலிஸ் நிலைய குற்றப்பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உட்பட நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது: ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்றத்தால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
  10. உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான நிதி வழங்கல் மற்றும் வாக்குச் சீட்டுகளை அச்சிட மறுத்ததன் மூலம் அரசாங்கத்தின் அச்சகரும் திறைசேரி செயலாளரும் தமக்கு வழங்கப்பட்டுள்ள அரசியலமைப்பு கடமைகளை மீறியுள்ளதாக எதிர்க்கட்சிகளின் அரசியல் கட்சிகள் கூறுகின்றன – சட்டம் எல்லைகளுக்கு உட்பட்டே தாம் பணியாற்றுவதாக அரச அச்சகப் பணிப்பாளர் கங்கானி லியனகே இதற்கு பதிலளித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கஹாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கஹவத்த பகுதியில் நேற்று இரவு (30) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...

எரிபொருள் விலை உயர்வு

இன்று (30) நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம்...

கொள்கலன் விடுவிப்பு தொடர்பில் அதிர்ச்சி தகவல்!

சுங்க பரிசோதனையின்றி கொள்கலன் ஏற்றுமதிகளை விடுவிப்பது தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஜனாதிபதியால்...

2 மாதங்களில் 23 பில்லியன் பெறுமதி போதைப் பொருட்கள் கைப்பற்றல்

நீண்ட நாள் மீன்பிடி படகுகள் ஊடாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 23 பில்லியன்...