சிறந்த கொழுந்து பறிப்பாளராக தெரிவான சீதையம்மாவுக்கு ரூ.3 லட்சம் பரிசு!

Date:

(செய்தி – பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)

ஹேலிஸ் பெருந்தோட்ட நிறுவனத்தின்கீழ் இயங்கும் தோட்டங்களில், பெண் தொழிலாளர்களுக்கிடையிலான சிறந்த கொழுந்து பறிப்பாளரை தெரிவு செய்யும் இறுதி போட்டி இன்று சமர்செட் பிரிவு தேயிலை மலையில் நடைபெற்றது.

இறுதிப் போட்டியில் 44 பெண் தொழிலாளர்கள் பங்கேற்றிருந்தனர். கொழுந்து பறிக்க 20 நிமிடங்கள் வழங்கப்பட்டன.

இப்போட்டியில் சிறந்த கொழுந்து பறிப்பாளராக தலவாக்கலை பெருந்தோட்ட நிறுவனத்தின் சமர்செட் தோட்டத்தைச் சேர்ந்த ஆர்.சீதையம்மா தெரிவுசெய்யப்பட்டார். 20 நிமிடங்களுக்குள் இவர் பத்து கிலோ 450 கிராம் தேயிலை கொழுந்து பறிந்திருந்தார். இவருக்கு மூன்று லட்சம் ரூபா காசோலையும்
தங்கப்பதக்கமும் வழங்கப்பட்டது.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சஜித் – ரணில் இடையே ரகசிய சந்திப்பு?

எதிர்காலத்தில் சமகி ஜன பலவேகய (SJB) மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி...

எரிபொருள் விலை குறைப்பு தொடர்பில் அமைச்சர் கருத்து

உலக சந்தையில் நிலவும் எரிபொருள் விலை தற்போதைய மட்டத்திலேயே தொடர்ந்து நீடிக்குமாயின்,...

சாதாரண தர பரீட்சை பெறுபேறு வெளியானது

2025 க.பொ.த. சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk...

ICC தலைவருடன் ஜனாதிபதி சந்திப்பு

சிறிலங்கா கிரிக்கெட் இடைக்கால குழு தொடர்பாக எழுந்துள்ள சிக்கல் குறித்து கலந்துரையாடுவதற்காக,...