உள்ளூராட்சி தேர்தலை உடனடியாக நடத்துமாறு வலியுறுத்தி கொழும்பில் இன்று தேசிய மக்கள் சக்தி முன்னெடுத்துவரும் ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
நெலும் பொக்குணையில் இருந்து நகர மண்டபம் வரையான வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது. பல வீதிகள் மூடப்பட்டுள்ளதுடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
நகர மண்டம் பகுதிக்கு அருகில் இவ்வாறு கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
N.S