அண்மையில் கல்வி அமைச்சு வளாகத்திற்குள் பலவந்தமாக பிரவேசித்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட IUSF அழைப்பாளர் வசந்த முதலிகே மற்றும் 48 பௌத்த பிக்குகள் உட்பட 62 பேர் கொண்ட குழுவிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
இன்று (பிப்ரவரி 27) கடுவெல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், பிணையில் விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த 23ஆம் திகதி பத்தரமுல்ல பெலவத்தையில் உள்ள “இசுருபாய” கல்வி அமைச்சின் வளாகத்தை முற்றுகையிட்டதன் பிரகாரம் அனைத்து பல்கலைக்கழக மாணவர் சம்மேளனத்தின் (IUSF) அழைப்பாளர் வசந்த முதலிகே, 48 பௌத்த பிக்குகள், பல மாணவர் செயற்பாட்டாளர்கள் உட்பட மொத்தம் 62 ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர். .
கடந்த பெப்ரவரி 22ஆம் திகதி ஹோமாகம பிடிபன சந்தியில் நடைபெற்ற சத்தியாக்கிரகத்தின் போது தமக்கு எதிராக நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை பிரயோகிக்கம் மேற்கொண்ட பொலிஸாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரியே மாணவர்கள் கல்வி அமைச்சின் வளாகத்திற்குள் புகுந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
N.S