யாழ்.மாநகர சபையின் வரவு – செலவுத் திட்டம் தோற்கடிப்பு!

Date:

யாழ்.மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் ஆறு மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது.

யாழ்.மாநகர சபையின் 2023 ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் இன்று செவ்வாய்க்கிழமை (21) மாநகர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட்டால் இரண்டாவது தடவையாக சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.

வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக 16 வாக்குகளும் எதிராக 22 வாக்குகளும் பதிவாகின.

45 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கும் யாழ்.மாநகர சபையில் ஒருவர் உயிரிழந்த நிலையில் இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் 16 உறுப்பினர்களும் , அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் சார்பில் 13 உறுப்பினர்களும் , ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் 9 உறுப்பினர்களும் , ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் 3 உறுப்பினர்களும் , ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் 2 உறுப்பினர்களும் மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் ஒரு உறுப்பினரும் யாழ்.மாநகர சபையில் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பிள்ளையான் மருத்துவமனையில்!

கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சிவசுப்ரமணியம் ரவீந்திரநாத் 2006 டிசம்பர்...

9 சீனப் பிரஜைகள் கைது

இணையவழி நிதி மோசடிகளில் ஈடுபடும் நோக்குடன் இலங்கைக்கு வருகை தந்ததாகச் சந்தேகிக்கப்படும்...

சவால்கள் மத்தியிலும் நாடு நிலைத்தன்மையுடன் முன்னேறுகிறது

நாடு பல்வேறு சவால்களை எதிர்கொண்டிருந்தாலும், அரசு அதில் சோர்வடையாமல் நிலைத்தன்மையுடன் நாட்டை...

இன்றைய வானிலை

இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு மேற்கு, சபரகமுவ, தெற்கு, மத்திய,...