பல்கலைக்கழக மாணவர்கள் ஏழு கோரிக்கைகளை முன்வைத்து இன்று கொழும்பில் பாரிய போராட்டத்தை நடத்தவுள்ளதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார்.
என்றாலும் கொழும்பு கோட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றம், பல்கலைக்கழக மாணவர் கூட்டமைப்பு (IUSF) இன்று கொழும்பில் நடத்த திட்டமிட்டுள்ள பேரணிக்கு எதிராக தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.
நீதிமன்ற உத்தரவின்படி, ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, நிதி அமைச்சின் வளாகங்கள் மற்றும் குறிப்பிட்ட சில பகுதிகளுக்குள் உட்புக தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் இந்த இடங்களுக்கான வீதிகளும் மூடப்பட்டுள்ளன.
N.S