3.5 மில்லியன் ரூபாய் மதிப்பிலான போலி ரூபாய் நோட்டுகளை வைத்திருந்த ஒருவரை பொலிஸார் நேற்று வியாழக்கிழமை (மார்ச் 09) கைது செய்தனர்.
மொத்தம் 700 போலி 5,000 ரூபாய் நோட்டுகளுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவு முகாமில் உள்ள விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் புதுக்குடியிருப்பு தேவிபுரம் பகுதியில் வைத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர் திருகோணமலையில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் போலி பணம் அச்சிடும் இயந்திரம் மற்றும் கையடக்கத் தொலைபேசி என்பனவும் இவரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.
அவர் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
N.S