மேலும் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சாரதி துஷ்மந்த மற்றும் நாலக பண்டார கோட்டேகொட ஆகியோருக்கு இவ்வாறு தொற்று உறுதியாகியுள்ளது.
நேற்றைய தினம் (21) பாராளுமன்ற அமர்விலும் சாரதி துஷ்மந்த பங்கேற்றிருந்ததாக கூறப்படுகிறது.