இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் குடியுரிமை தொடர்பான பல விடயங்கள் தொடர்பில் குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் மற்றும் ஆட்பதிவு ஆணையாளர் ஆகியோரிடம் வாக்குமூலங்களை பதிவு செய்து சமர்ப்பிக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன டி அல்விஸ் இன்று (23) குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
குற்றப்புலனாய்வு திணைக்களம் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினரின் சட்டத்தரணிகள் ஆகியோரால் முன்வைக்கப்பட்ட உண்மைகளை கருத்திற் கொண்டு குறித்த முறைப்பாடு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
அந்த வாக்குமூலங்களைப் பெற்றுக்கொண்ட பிரதம நீதவான், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 32ஆவது பிரிவின் கீழ் டயானா கமகேவை கைது செய்வதற்கான உத்தரவைப் பிறப்பிக்குமாறு பாதிக்கப்பட்ட தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்க முடியுமா? இல்லை? என தீர்பு வழங்க முடியம் என்றும் மனுவை ஏப்ரல் 6-ம் தீக்சித்ய் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
N.S