சிவில் சேவை திணைக்களத்தை (CSD) கலைக்கும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை என ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி செயலகத்தின் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
2015 அமைச்சரவைப் பத்திரத்தின்படி சிவில் சேவைத் திணைக்களம் மதிப்பிழந்த சேவையாக அங்கீகரிக்கப்பட்டதாகவும், தற்போது காலாவதியாகியுள்ளதாகவும் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.
சிவில் சேவை திணைக்கள உறுப்பினர்கள் 55 வயதுக்கு மேற்பட்ட சேவை நீடிப்பு கோருவதற்கு அனுமதிக்கப்படுவதாகவும், இதனால் அவர்கள் 60 வயதுவரை வரை சேவையாற்ற முடியும் என்றும் ரத்நாயக்க குறிப்பிட்டார்.
இந்தக் கொள்கைகளில் எந்த மாற்றமும் இல்லை என்றும், எதிர்காலத்தில் அவற்றை மாற்றும் திட்டம் எதுவும் இல்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.
நேற்று (24) பிற்பகல் மொரட்டுவ கட்டுபெத்தவில் உள்ள சிவில் சேவை திணைக்களத்தின் தலைமையகத்தில் சிவில் சேவை திணைக்கள அதிகாரிகளின் முயற்சிகள் மற்றும் பங்களிப்புகளை பாராட்டும் வகையில் இடம்பெற்ற பாராட்டு நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோன் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தின் போது, சிவில் சேவை திணைக்களத்தின் பங்களிப்புகள் அங்கீகரிக்கப்பட்டு பாராட்டப்பட்டது.
N.S