இருவரின் உயிரை பறித்த சோகமான சம்பவம்

Date:

பள்ளத்தில் விழுந்து இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு மாநகரசபையில் சாதாரண தொழிலாளர்கள் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இன்று (மார்ச் 27) பிற்பகல், கொழும்பு, கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹெட்டியவத்த சந்தி பகுதியில் குழாய் அமைப்பை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த ஒருவர் குழாய் அமைப்பில் தவறி விழுந்துள்ளார்.

பின்னர் அவரை காப்பாற்ற மற்றைய நபரும் குழிக்குள் இறங்கியதாகவும், அவரும் குழிக்குள் விழுந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இருவரும் ஆபத்தான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் 28 மற்றும் 38 வயதுடைய கொழும்பு 10 மற்றும் கொழும்பு 14 ஆகிய இடங்களில் வசிப்பவர்களாவர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சுரேஷ் சாலேவுக்கு திடீர் மாரடைப்பு

முன்னாள் அரச புலனாய்வு சேவைத் தலைவர் சுரேஷ் சாலே திடீர் மாரடைப்பு...

அரசு ஊழியர்களுக்கு தவணை கட்டண முறையில் 20 கிலோ அரிசி!!

அரசு ஊழியர்களுக்கு தவணை கட்டண முறையின் கீழ் 20 கிலோ அரிசி...

ஜனாதிபதி செயலக சிரேஷ்ட உதவிச் செயலாளர் கைது…!

-போலி கடவுச்சீட்டு தயாரித்த குற்றச்சாட்டு: ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் தொடர்புடைய நபர் ஒருவர்...

சரித் அபேசிங்க மீது SJB எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை

இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐக்கிய...