பேருவளை கரையோர கடற்பகுதியில் 3.7 ரிக்டர் அளவில் சிறிய நிலநடுக்கம் உணரப்பட்டதாக புவியியல் ஆய்வு பணியகம் அறிவித்துள்ளது.
பேருவளையில் இருந்து 34 கிலோமீட்டர் தொலைவில் இன்று பிற்பகல் 01:00 மணியளவில் இந்த நடுக்கம் உணரப்பட்டுள்ளதாகவும் இதனால் எவ்வித பாதிப்பும் இல்லையெனவும் சுனாமி அச்சுறுத்தல் ஏதும் இல்லை என்பதையும் புவியியல் ஆய்வு பணியகம் உறுதிப்படுத்தியுள்ளது.
N.S