கோட்டாபய ராஜபக்சவை வெளியேற்றியது போன்று சர்வதேச நாணய நிதியத்தையும் வெளியேற்ற வேண்டும் என பல்கலைக்கழக மாணவர் பேரவையின் அழைப்பாளர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவு ஒரு அதிசயம் அல்ல, ஆனால் நாட்டிற்கு மிகப்பெரிய பிரச்சனை என்று அவர் கூறுகிறார்.
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அமைவாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரச சொத்துக்களை விற்பனை செய்வது தொடர்பான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றார் எனவும் எதிர்க்கட்சிகளும் சர்வதேச நாணய நிதியத்தின் முன் கைப்பாவைகளாக மாறியுள்ளதாகவும் முதலிகே தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தால் பொருளாதாரப் பிரச்சனைகள் தீர்ந்துவிட்டதாக ஒரு கருத்தை உருவாக்குகிறது. பணம் திருடப்பட்டதால் இன்றைய பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. நாட்டின் பொருளாதாரக் கொள்ளையினால் நாடு திவாலானது. ஐ.எம்.எஃப் பிரச்சனைகள் தீர்ந்துவிடும் என்று தவறான எண்ணத்தை உருவாக்குகிறார்கள். ஐ.எம்.எப்.யின் நிலைப்பாட்டை எதிர்க்கட்சிகள் மக்களிடம் சொல்லவில்லை என்று அவர் கூறினார்.