ஆன்லைன் நிதி மோசடி தொடர்பில் குறைந்தது 39 சீன பிரஜைகள் அளுத்கம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் பல்வேறு நாடுகளில் உள்ளவர்களின் கணக்குகளில் இருந்து பல மாதங்களாக இலட்சக்கணக்கான பணத்தை இணையத்தின் ஊடாக மோசடி செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அளுத்கம, களுவாமோதர பிரதேசத்தில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் குறித்த குழுவினர் தங்கியிருந்ததாகவும், பல தூதரகங்கள் ஊடாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சீன பிரஜைகள் அளுத்கம பொலிஸுக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அவர்களிடம் இருந்த பல ஸ்மார்ட்போன்கள் மற்றும் பணமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.