புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தில் அடிப்படை உரிமைகளுக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படாது என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
வர்த்தமானி அறிவித்தலில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள இந்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் விவாதத்திற்காக சமர்ப்பிக்கப்பட்டு சட்டமாக்கப்பட உள்ளது.
யுத்தம் முடிவடைந்த பின்னர், பயங்கரவாதத்தை எதிர்கொள்வதில் சர்வதேச தரத்திற்கு இணங்க புதிய சட்டத்தை கொண்டு வருவதற்கும் தற்போது அமுலில் உள்ள பயங்கரவாத தடை சட்டத்தை நீக்குவதையும் (PTA ) அடிப்படையாக கொண்டே இந்த புதிய சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை (UNHRC) உட்பட சர்தேச சமூகத்தின் அழுத்தத்தின் கீழ் அரசாங்கம் புதிய யங்கரவாத ஒழிப்பு சட்டமூலத்தை உருவாக்கியுள்ளது.
என்றாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (TNA) உட்பட பல கட்சிகள் ஏற்கனவே புதிய சட்டமூலத்தின் விதிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. எவ்வாறாயினும், அமெரிக்கா, இந்தியா, ஐக்கிய இராச்சியம் மற்றும் ஜேர்மனி போன்ற நாடுகளின் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை ஆய்வு செய்த பின்னரே இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதாக அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
“அமெரிக்கா, இந்தியா, ஐக்கிய இராச்சியம் மற்றும் ஜேர்மனி போன்ற நாடுகளில் உள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் எங்களுடையதை விட மிகவும் கடுமையானவை . எனவே, தற்போதைய பதிப்பில் பெரிய மாற்றங்களைச் செய்ய மாட்டோம். சிறிய மாற்றங்கள் இருக்கலாம்,” எனவும் அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
N.S