பண்டிகைக் காலத்தை முன்னிட்டு 38 கூடுதல் ரயில் சேவைகளை இயக்க ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.
குறுகிய தூர ரயில்சேவைகளைவிட நீண்ட தூர ரயில் சேவைகளை இயக்குவதற்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாக ரயில்வே பொது மேலாளர் வி.எஸ்.பொல்வத்தகே தெரிவித்துள்ளார்.
சிறப்பு ரயில்கள் சேவைகளுக்கு அப்பால் வழமையாக இயங்கும் என்றும் நீண்ட தூர ரயில் சேவைகள் வழக்கம் போல் இயக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
நீண்ட தூர சேவைகளில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, தேவைக்கேற்ப கூடுதல் பெட்டிகளை இணைக்க திணைக்களம் முடிவு செய்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
N.S