ஹம்பாந்தோட்டை கடற்கரையில் இருந்து 25.8 கிலோமீற்றர் தொலைவில் கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இன்று (24) அதிகாலை 12.45 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
அதன் வலிமை ரிக்டர் அளவுகோலில் 4.4 அலகுகளாகப் பதிவானதாகவும், நிலநடுக்கத்தால் சுனாமி ஆபத்து ஏதும் இல்லை என்றும் பணியகம் மேலும் கூறியது.