நாட்டை பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் சீர்குலைக்கும் சதித்திட்டத்தின் ஒரு அங்கமாகவே கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்தின் வீழ்ச்சி ஏற்படுத்தப்பட்டதாக ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார்.
“நாங்கள் வீழ்ச்சியடையவில்லை. எங்கள் சரிவு திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எடுத்த அனைத்து தீர்மானங்களையும் நான் அங்கீகரிக்கவில்லை. ஆனாலும், அவர் நல்ல அர்த்தமுள்ள மற்றும் நாட்டுக்கு பயனை ஏற்படுத்தக்கூடிய முடிவுகளையே எடுத்திருந்தார்.
இயற்கை விவசாயத்தை அறிமுகப்படுத்துவதற்கான முடிவை அவர் நல்ல நோக்கத்துடன்தான் எடுத்ததார். அதனால் எதிர்காலத்தில் நாடு பல நன்மைகளை அடைந்திருக்க கூடும். அனால் துரதிஷ்டவசமாக அந்த முடிவை சரியான நேரத்தில் அவர் எடுத்திருக்கவில்லை.
கொவிட் தொற்று காரணமாக நாடு மூடப்பட்டது. அந்த கடினமான நேரத்தில் கொவிட் தடுப்பூசி திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடு சர்வதேச பாராட்டினையும் கோட்டாபய ராஜபக்ஷ பெற்றிருந்தார்” – எனவும் நாமல் ராஜபக்ஷ கூறியுள்ளார்.
N.S