சுயாதீன தொலைக்காட்சி சேவையின் ஊழியர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக முறைப்பாடு கிடைக்கவில்லை!

Date:

சுயாதீன தொலைக்காட்சி சேவையின் முன்னாள் ஊழியர் ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக தனக்கு எவ்வித முறைப்பாடுகள் கிடைக்கவில்லை. சம்பவம் தொடர்பில் முறையான முறைப்பாட்டைப் பெறுமாறு அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி கவிரத்ன அமைச்சரிடம் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.

“எனக்கு இதுவரை எந்த முறைப்பாடும் கிடைக்கவில்லை. இந்த சம்பவத்தை கேள்வியுற்ற நான், பாதிக்கப்பட்ட தரப்பினரிடமிருந்து முறையான முறைப்பாட்டைப் பெற்றுக்கொள்ளுமாறு அமைச்சின் செயலாளர் அனுஷ பெல்பிடவுக்கு அறிவுறுத்தியுள்ளேன். முறையான முறைப்பாடு அளிக்கும்படி அவர் பாதிக்கப்பட்டவரிடம் தெரிவித்திருக்கிறார்” என அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக ஆலோசனை உதவிகளை வழங்க சட்டமா அதிபர் திணைக்களம் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக பெண் சட்டத்தரணி ஒருவர் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக சுயாதீன தொலைக்காட்சி சேவையின் பணிப்பாளர் தம்மிடம் தெரிவித்ததாகவும் அமைச்சர் இன்று பாராளுமன்றில் கூறியுள்ளார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சம்பத் வங்கி பற்றிய சந்தேகங்கள் அதிகரிப்பு!

இலங்கையின் வங்கித் துறையில் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ள ரூ. 13.5 பில்லியன்...

இந்திய துணை ஜனாதிபதி நாளை மறுநாள் இலங்கை வருகிறார்

இந்திய துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் 2 நாள் அரசு முறை பயணமாக...

நாட்டில் இன்று வெப்பம் அதிகரிக்கும்

நாட்டில் இன்று (17) வெப்பத்தின் அளவு எச்சரிக்கை மட்டம் வரை அதிகரிக்கக்கூடும்...

400 கோடி பெறுமதி ஹெரோயின் மீட்பு

போதைப்பொருள் கடத்தப்பட்ட நிலையில் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்ட நெடுநாள் மீன்பிடி படகில், 400...