மக்களின் பலத்துடன் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும்!

0
161

இலங்கை தனது வரலாற்றில் ஒரு தீர்க்கமான தருணத்திற்கு வந்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளதுடன் அந்தப் போராட்டத்தில் நாங்கள் நிச்சயமாக வெற்றி பெறுவோம் எனவும் கூறியுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடியான நிலைமையை வெறும் சீர்திருத்தங்களினாலோ அல்லது சட்டங்களினூடாகவோ தீர்க்க முடியாது. ஊழல் ஆட்சியாளர்களிடமிருந்து அதிகாரத்தை மக்களிடம் வழங்குவதன் மூலமே அதனைச் செய்ய முடியும்.

தேசிய மக்கள் சக்தியால் வடக்கிலிருந்தும் தெற்கிலும் கிழக்கிலிருந்தும் மேற்கிலும் நாடு முழுவதிலும் உள்ள மக்களை ஒன்றிணைக்க முடிந்துள்ளதாகவும், ஏனைய கட்சிகள் வடக்கு அல்லது தெற்கு என மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

நாங்கள் எங்கு சென்றாலும், மக்கள் எங்களைப் பற்றி பேசுகிறார்கள். அவர்கள் எங்களை நம்புகிறார்கள். வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களும் முன் எப்போதும் இல்லாத வகையில் எங்களுக்கு ஆதரவளிக்கிறார்கள்.

இந்த நெருக்கடியில் இருந்து இந்த ஆட்சியாளர்கள் நாட்டை ஒரு அங்குலம் கூட முன்னோக்கி கொண்டு செல்வார்கள் என்று மக்கள் நம்பவில்லை. நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதில் மிக முக்கியமான அம்சம் மக்களுக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான நம்பிக்கையும் பிணைப்பும் ஆகும்.

இன்று அனைத்துத் துறை மக்களும் இந்த அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இழந்துவிட்டனர். விவசாயிகள், மீனவ சமூகம், தொழில் வல்லுநர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த அரசாங்கத்தை நிராகரிக்கிறார்கள். மக்களின் பலத்துடனும் ஆசீர்வாதத்துடனும் இந்த நாட்டை முன்னேற்ற முடியும் என்றார்.

N.S

default

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here