Thursday, November 14, 2024

Latest Posts

ஊடக சுதந்திர தினத்தில் சஜித் எடுத்துள்ள முயற்சி – படங்கள் இணைப்பு

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களின் தலைவர்கள், பத்திரிகை ஆசிரியர்களுடன் பிரதிநிதிகளின் சந்திப்பு இன்று கொழும்பில் நடைபெற்றது.

அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்படும் ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு எதிராக பாரிய சக்தியாக ஒன்றிணைந்து செயற்படுவதற்கு பல எதிர்க்கட்சிகள் சமீபகாலமாக முன்முயற்சி எடுத்துள்ளதுடன், ஊடக நிறுவனங்களுடனான இந்த சந்திப்பு அந்த திட்டத்தின் இன்னொரு படியாக அமைந்தது.

இதன்போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, உலக ஊடக சுதந்திரத்தை கொண்டாடும் இன்றைய தினத்தில் எதிர்க்கட்சிகள் ஊடக நிறுவனங்களுடன் இணைந்து பொருளாதார அரசியல் உரையாடலை ஆரம்பித்துள்ளமை மகிழ்ச்சியளிக்கிறது.

ஜனநாயகத்தின் 3ஆவது பிரதான தூண்களான நிறைவேற்று, சட்டவாக்கத்துறை, நீதித்துறை ஆகியவற்றுடன் 4ஆவது பிரதான தூணாக ஊடகங்களின் வகிபாகம் பாராட்டப்பட வேண்டியது என எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

முற்போக்கான மற்றும் உரையாடல் கருத்துப் பரிமாற்றம் இன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித் தலைவர், பல்வேறு அரசியல் கட்சிகள் தனித்துவமான கொள்கைகளைக் கொண்டிருந்தாலும், தேசிய ரீதியில் முக்கியமான பல விடயங்களில் எதிர்க்கட்சிகளாக ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

உதாரணமாக, ஊடகங்களைக் கட்டுப்படுத்த அரசாங்கம் தயாராகி வரும் ஒலிபரப்பு அதிகாரசபை சட்டம், அரசாங்கம் கொண்டுவரத் திட்டமிட்டுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டம் போன்றவற்றைச் சுட்டிக்காட்ட முடியும் என சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

அதனூடாக அடக்கப்படவுள்ள 220 இலட்சம் மக்களைப் பாதுகாப்பதற்கு எதிர்க்கட்சி என்ற வகையில் தமது குழுவும் ஊடகவியலாளர்களாகிய நீங்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.