வெசாக் தினத்தை முன்னிட்டு சிறைக் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்கும் திட்டத்தில் யாழில் 14 பேர் விடுவிக்கப்பட்டனர்.
சிறு குற்றங்கள் மற்றும் குற்றப்பணம் செலுத்த முடியாமல் தண்டனை பெற்றவர்கள் வெசாக் தினத்தை முன்னிட்டு மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யப்பட்டனர்.
யாழ்ப்பாணம் சிறைச்சாலை அத்தியட்சகர் பி.ஏ.உதயகுமார தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதான சிறைக் காவலர் டி.எச்.ஹேரத் உள்ளிட்டோர் பங்குகொண்டிருந்தனர்.









