கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்படாதென நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய கூறியுள்ள போதிலும், அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் கோதுமை மாவின் மொத்த விலையை 10 ரூபாவினால் அதிகரித்துள்ளது.
கோதுமை மாவிற்கு வழங்கப்பட்டு வந்த 3 ரூபா சுங்க வரிச் சலுகை நீக்கப்பட்டதன் காரணமாகவே கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
ஒரு மாதத்திற்கு முன்னர் ஒரு கிலோ கோதுமை மாவின் மொத்த விலை 190 முதல் 195 ரூபா வரை இருந்தது. தற்போது ஒரு கிலோ கோதுமை மாவின் மொத்த விலை 210 ரூபாவாக உள்ளதாக அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், 3 ரூபா சுங்க வரிச் சலுகை நீக்கப்பட்ட போதிலும், சந்தையில் கோதுமை மாவின் விலை அதிகரிப்பதற்கு இது காரணமல்ல எனவும் நிதி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
N.S
N.S