2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்க முதன்முறையாக தகவல் வெளிப்படுத்தியுள்ளார்.
75 வருடங்களாக இந்த நாட்டில் நிலவி வரும் நெருக்கடியான பொருளாதார நிலையை தலைகீழாக மாற்றும் கொள்கைகளை தாம் முன்வைப்பதாகவும் கூறியுள்ளார்.
இதன்படி அடுத்த ஜனாதிபதி தேர்தலில் கட்சி சார்பற்ற வேட்பாளராக போட்டியிடவுள்ளதாகவும் அர்ப்பணிப்புடன் மக்களுக்கு சேவையாற்றக்கூடிய எந்தவொரு குழுவும் தம்முடன் இணைந்து கொள்ள முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மதத் தலைவர்கள், சிரேஷ்ட அரச அதிகாரிகள், தொழில் வல்லுனர்கள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கைகள் காரணமாக 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட தீர்மானித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
N.S